என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருவண்ணாமலை கொலை
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கொலை"
திருவண்ணாமலை அருகே பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா மேல்அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உத்தரகுமார் (வயது 31), தொழிலாளி. இவர் தனது மாமா சங்கராபுரத்தை சேர்ந்த மாயவன் மற்றும் அவரது நண்பர் மார்க்கண்டேயன் (30) ஆகியோருடன் சம்பவத்தன்று மேலதிகான் பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
அப்போது திருவண்ணாமலை கீழ்நாத்தூர் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(26), கண்ணக்குருக்கை கிராமத்தை சேர்ந்த ராஜா (23) ஆகியோர் பீர்பாட்டில் மற்றும் தடியை வைத்துக் கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதை தட்டிக்கேட்ட உத்தரகுமாரை அவர்கள் இருவரும் சேர்ந்து பீர் பாட்டில் மற்றும் தடியால் தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த மார்க்கண்டேயனையும் அவர்கள் பீர்பாட்டிலால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த மார்க்கண்டேயனையும், உத்தரகுமாரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மார்க்கண்டேயன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவையும், கார்த்திக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மருமகளை கிண்டல் செய்த தகராறில் தாக்கப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார்.
அப்போது, 6 பேர் கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்தனர். இதனை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உருட்டுக்கட்டை, கல்லால் ஆறுமுகத்தை பயங்கரமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மகன் சுரேசையும் அந்த கும்பல் தாக்கியது.
இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வினோத் (20) மற்றும் பார்த்தீபன் (30), நவ அரசு (20), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 6 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான சிறுவன், கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்ற 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.
பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

×

X